Header Ads

இலங்கையில் தங்கியிருந்து அமெரிக்க வங்கிகளில் பாரியளவில் கொள்ளை : அதிர்ச்சி தகவல் வெளியீடு


நைஜீரிய பிரஜைகள் இலங்கையில் தங்கியிருந்து, உலகின் முக்கிய வங்கிகளில் கொள்ளையிட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் என்ற போர்வையில் நைஜீரிய பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர்.

இலங்கையை மையமாகக் கொண்டு இவர்கள் உலகின் பல நாடுகளின் வங்களில் ஊடுறுவி பணம் கொள்ளையிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, சீனா, இந்தியா, கொரியா உள்ளிட்ட பல நாடுகளின் வங்கிகளின் கணனிக் கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதுவரையில் சுமார் ஐம்பது கோடி ரூபாவிற்கு மேல் இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொள்ளையிட்ட 50 கோடி ரூபாவில், 20 கோடி ரூபா பணத்தை நைஜீரிய பிரஜைகள் இரகசியமாக நைஜீரியாவிற்கு எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளின் இரகசிய விபரங்கள் ஹெக் செய்யப்பட்டு நைஜீரிய பிரஜைகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து கொண்டு பணம் கொள்ளையிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டமிட்ட கொள்ளைக் கும்பல் நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து கோடி ரூபா வரையில் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக குறிப்பிடப்பிடப்படுகிறது.

சர்வதேச பொலிஸாருடன் இணைந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.