Header Ads

இரவில் இந்தியா ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே: பிரமிக்க வைக்கும் நாசா போட்டோக்கள்


இரவில் இந்தியா எப்படி உள்ளது என்ற செயற்கைக்கோள் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பூமி எப்படி உள்ளது என்ற உலக வரைப்படத்தை அதாவது செயற்கைக்கோள் புகைப்படங்களை நைட் லைட்ஸ் என்பார்கள். அந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இந்த நைட் லைட்ஸ் புகைப்படங்களை அடிக்கடி முடிந்தால் தினமும் வெளியிட முடியுமா என்று ஆலோசித்து வருகிறது நாசா. நாசா மட்டும் அவ்வாறு செய்தால் தட்பவெட்ப நிலையை கணிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2012ம் ஆண்டுக்கு பிறகு இரவு நேரத்தில் பூமி எப்படி இருக்கிறது என்ற செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்கு பிறகு 2016ம் ஆண்டு பூமி இரவில் எப்படி தெரிகிறது என்ற நாசா புகைப்படங்கள் பிரமிப்பாக உள்ளன.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

No comments

Powered by Blogger.