ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் பிராவோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்
குஜராத் அணியின் முன்னணி சகலதுறை வீரரான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக முற்றிலுமாக விலகியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிக்பாஷ் கிரிக்கட் லீகில் விளையாடியபோது பிராவோவுக்கு இடது காலில் தசைநார் முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிராவோ, குஜராத் அணியுடன் இணைந்தார். எனினும் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை.
இந்த நிலையில் காயம் முழுவதுமாக குணமடையாததால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் பிராவோ.
ராஜ்கோட்டில் நேற்று பஞ்சாப் – குஜராத் இடையே ஆட்டம் நடைப்பெற்றது.
அப்போது, டாஸ் போடுவதற்கு வந்த குஜராத் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா, "பிராவோ அணியில் இல்லை. அவர் காயத்திலிருந்து குணமடைய மூன்று முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம்.
அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டார். இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் பேசி பிராவோவுக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்' என்ற அந்த தகவலை தெரிவித்தார்.

No comments