Header Ads

ஐபிஎல்லில் சுதப்பிய மலிங்க : சுவாரசிய சம்பவம்


நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய குஜராத்- மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் பல சுவாரசிய விடயங்கள் அரங்கேறின.

ஐபிஎல் போட்டியின் 16வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் லயன்சும், மும்பை இந்தியன்ஸும் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் குஜராத்தை சாய்த்து மும்பை அணி தொடர்ந்து 4-வது வெற்றியை சுவைத்தது.

இந்த போட்டியில் பல சுவாரசிய விடயங்கள் அரங்கேறியது 
  • குஜராத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் தனது விளையாட்டு உபகரணங்களை தவற விட்டு விட்டார். இதனால் நேற்றைய போட்டியில் அவரால் பங்கேற்க இயலவில்லை. 
  • 15-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 200-வது சிக்சராக அமைந்தது. 
  • மும்பை வீரரான யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா 4 ஓவர்களில் 51 ஓட்டங்களை வாரி இரைத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இது ஐ.பி.எல் வரலாற்றில் மலிங்காவின் மோசனான பந்து வீச்சாகும். 
  • நேற்றைய போட்டி நடந்த மும்பையின் வான்கடே மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 7 போட்டிகளிலும் 2வதாக ஆடிய அணியே வெற்றியை ருசித்துள்ளது. 
  • குஜராத் அணியின் தொடக்க வீரர் வெய்ன் ஸ்மித் தனது இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். அதே போல மும்பை தொடர்க்க வீரர் பர்த்தீவ் படேலும் தனது இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். இருவருமே பேக்வர்டு பாயிண்ட் திசையில் நின்ற பீல்டரிடம் கேட்ச் ஆகி ஆச்சரிய ஒற்றுமையை அளித்தார்கள்.

    No comments

    Powered by Blogger.