Header Ads

பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிஸாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, சாம்ப்ஸ் எலிஸில் பகுதியை பொலிஸார் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம், இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்று தற்போதைக்குக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், பாரீஸின் முக்கிய பகுதிகளில் வெடி பொருள் எதாவது இருக்கின்றதா என்று தேடுதலும் நடந்து வருவதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

பிரான்சின் பரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பரிஸ் சோம்ப்ஸ் எலிசேயில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 230 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பாரிய பிரச்சினையாக விளங்கி வருகின்றனர். அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மேற்படி தீவிரவாதத் தாக்குதலில் பொலிஸ் அதிகாாி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.

இதனால் பாிஸ் நகாில் கடும் பதற்றம் நிலவிய நிலையில், குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இந்நிலையில், தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனினும் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தாக்குதல்தாரி குறித்த தகவல்களை வெளியிடப் போவதில்லை என்றும் பரிஸ் அரச வழக்கறிஞர் பிரான்சுவா மொலின்ஸ் தெரிவித்தார்.

 இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் ஆராயும் வகையில் இன்று பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடனான அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்ட் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.