Header Ads

யார் சிறந்தவன்? கோஹ்லி, டோனி இடையே நடந்த கடும் போட்டி


இந்தியாவில் தற்போது பத்தாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியில் மூன்று வித போட்டிகளில் தலைவராக உள்ள கோஹ்லி பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு தலைவராக உள்ளார்.

இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சென்னை மற்றும் புனே அணிக்கு தலைவராக இருந்த டோனி தற்போது நடக்கும் ஐபில் தொடரில் தலைவர் பதவியை உதறிவிட்டு, ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பத்தாவது ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் 5 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன.

ஐபிஎல் போட்டிகள் துவங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், டுவிட்டரில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வீரர்களில் பெயர்கள் தற்போது தெரியவந்துள்ளது.

இதில் தலைவராக இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வீரராகவும், சிறந்த வீரராகவும் புனே அணி வீரர் டோனி முதலிடம் பிடித்துள்ளார்.

இவரை தொடர்ந்து பெங்களூரு அணி தலைவர் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக டிவிலியர்ஸ் (பெங்களூரு), காம்பிர் (கொல்கத்தா), யுவராஜ் (ஐதராபாத்), ரோகித் சர்மா (மும்பை), ஸ்டீவ் ஸ்மித் (புனே), ரெய்னா (குஜராத்), வார்னர் (ஐதராபாத்), புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்) ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.

ஐபில் தொடரில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹேஸ்டாக் இமோஜிக்களின் பயன்பாட்டின் அடிப்படையில் வீரர்களின் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.