Header Ads

பொறுத்திருந்து பாருங்கள்: சசிகலாவின் 4 விரல்களுக்கான அர்த்தம், இதுதானோ..


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகளாக இருந்த காரணத்தால் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது அதிமுக பொதுச்செயலாளர் பதவி.

அம்மாவின் வழியில் கட்சியை நடத்துகிறேன், அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று ஆரம்பத்தில் அடக்கமாக பேசிவந்த அவர், நாட்கள் செல்ல செல்ல, அநாகரீகமான அரசியல் பேச்சினை ஆரம்பித்தார்.

பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் நக்கலாக பதிலளித்து வந்தார். இவர் பேசும் விதம், நாகரீகமற்ற அரசியல் பேச்சினையே எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

மேலும், இவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், பன்னீர் செல்வத்தை பற்றி தாக்கி பேசுவதும், எதிர்கட்சிகளை, எதிரிகட்சியினர் என விமர்சிப்பதும் என்று நக்கலாக பதிலளித்து வந்தார்.

கடந்த 6 நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசிய விதம் இதோ,

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு – நடக்கிறத பொறுத்திருந்து பாருங்கள்

“ஓரளவுக்கு தான் பொறுமை”

“வேறுவிதமாக போராட்டம்”

“நடக்குறதெல்லாம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல”

“நீங்கள் எல்லாம் புத்திசாலிகள், உங்களுக்கே தெரியும்”

“நான் ஒரு குட்டி சிங்கம், எத்தனை வலையா இருந்தாலும் பிச்சிக்கிட்டு வருவேன்

“1000 பன்னீர் செல்வத்தை அரசியல் நான் பார்திருக்கிறன்,”

“அம்மாவை அரசியலுக்கு வரச்சொன்னதே நான்தான்”.

இவ்வாறு கூறிய பின் அடிக்கடி நாலு விரலை காட்டினார், அதற்கு நான்கு வருட சிறைத்தண்டனையைத்தான் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவில்லையே.

No comments

Powered by Blogger.