Header Ads

தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தின் உறுதியை நிரூபிக்கும் அடையாள அட்டைகள்


தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களம். இதன் செயற்பாடு 01-01-2007 ஆரம்பமாகியுள்ளது.

முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (ச.சித்திரன்) உத்தியோகபூர்வமாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2007ம் ஆண்டு குறித்த திணைக்களத்தினால்வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டைகள் இரண்டு மீட்கப்படுள்ளது.

குறித்த ஆள் அடையாள அட்டைகள் ஓரே திகதிகளாக 12-05-2007ஆம் ஆண்டுவெளிக்களப்பணிப்பளர் கலைச்செல்வன் மற்றும் அவருடைய மனைவி சாந்திக்கும்வழக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு அடையாள அட்டைகளும் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போதுதவறவிடப்பட்டடிருக்கின்றது.

இந்தநிலையில் ஏழு வருடங்களை தாண்டிய நிலையில் மழை, வெயிலுடன் மண்ணில் புதைந்தும்அதன் தரம் குறையாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டஆள்அடையாள அட்டைகளில் பிறந்த திகதி பால் பிறந்த இடம் முகவரி தொழில் போன்றமுக்கிய தரவுகள் பொறிக்கப்பட்டு கணணிமயப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குறித்த ஆள்அடையாள அட்டையை தமிழீழ காவல்துரையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் சோதனைகளுக்கு பயன்படுத்தியாதாகதெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டையைஇறுதி யுத்தத்தின் முடிவில் முதன் முதலில் இலங்கை ;இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் தலைவரை உறுதி செய்வதற்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.