Header Ads

யாழில் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு


கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் இன்றுமாலை திறந்து வைக்க ப்பட்டது.

அமரர் நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண, லங்கா நவ சம சமாஜ கட்சியின் பொது செய லாளர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

திறந்து வைக்கப்பட்ட சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.







No comments

Powered by Blogger.