Header Ads

புதிய கட்சியுடன் கூட்டணி சேரும் 11 கட்சிகள் ? தமிழ் கட்சியா ?


புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் 11 அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளே இவ்வாறு, புதிய கட்சியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

இந்தக் கட்சிகளில் பல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவி வகித்த ஒருவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்தின் பின்னர் இந்த கட்சிகள் இணைந்து கொள்வது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றி குறித்து திட்டமிடாமை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தாமை, கூட்டமைப்பில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த கட்சிகள் புதிய கூட்டணியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.