Header Ads

தவறாக பிரதிநிதித்துவம் செய்த குடிவரவாளர்களின் குடியுரிமையை ஒட்டாவா தொடரந்தும் இரத்து

கனடா-நாட்டிற்குள் வருவதற்காக தங்களை தவறாக பிரதிநிதித்துவம் செய்த குடிவரவாளர்களின் குடியுரிமையை தொடர்ந்து இரத்து செய்யும் என நீதித்துறையினால் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இது சம்பந்தமாக இரண்டு சமூக குழுக்கள் விடுத்த கோரிக்கைகளிற்கு ஒட்டாவா உடன்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சவாலை முன்னெடுத்துள்ளது.கனடிய அகதிகள் வழக்கறிஞர் சங்கம் மற்றும் British Columbia சிவில் உரிமைகள் சங்கம் ஒரு அரசியலமைப்பு சவாலை மத்திய சட்டத்தின் முன்னெடுத்தது. ஏனெனில் எந்த முறையான முறையீட்டு செயல் முறையும் இல்லை.

இவ்விடயம் நீதிமன்றத்தில் முடிவிற்கு வரும்வரையில் அரசாங்கம் எல்லா குடியுரிமை இரத்துக்களையும் நிறுத்த வேண்டும் என மேற்படி குழுக்கள் வாதிட்டனர்.இதனை செய்யப்போவதில்லை என அரசாங்கம் வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளது.

அரசாங்கத்தின் மறுப்பு குறித்து தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.