Header Ads

இனி பெண்களும் பிரதிப் பொலிஸ்மா அதிபராகலாம்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் பதவி உயர்வு பெற்றுச் செல்வதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தற்போது இலங்கையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உச்ச பட்சமாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி வரையில் பதவி உயர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தற்போது நாட்டில் 11000 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவிகளையே பெண்கள் வகித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் இலங்கையில் பொலிஸ்மா அதிபர் பதவி வகிக்க சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் இவ்வாறு நியமிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஒப்பது பெண் துணை பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.