Header Ads

மஹிந்தவின் புதிய கட்சியான 'ஐக்கிய மக்கள் முன்னணி' ஒக்டோபர் 8ல் ஆரம்பம்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கட்சி எதிர்வரும் 8ம் திகதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அக்கட்சிக்கு 'ஐக்கிய மக்கள் முன்னணி' என பெயரிடப்படவுள்ளதுடன் வெண் தாமரை மலர் சின்னமாக அமையவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள 'போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய மக்கள் பேரணி' எனும் தொனிப்பொருளிலான பேரணி எதிர்வரும் எட்டாம் திகதி எகலியகொடவில் நடைபெறவுள்ளது.

அதில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன்போதே புதிய கட்சிக்கான சம்பிரதாயபூர்வ அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.மேலும் புதிய கட்சியின் கொள்கைகள், வேலைத்திட்டங்கள் அடங்கிய கட்சிப் பிரகடனமும் அதன்போது வெளியிடப்படவுள்ளது.

புதிய கட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஏனைய சில அமைப்புகளும் இணையவுள்ளதாகக் தெரியவருகிறது.

இதேவேளை அக்கட்சியில் சகல இனக்குழுமங்களையும் அடையாளப்படுத்தும் வகையில் பிரத்தியேகக் குழுக்கள் அமைத்து செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.