தேர்தலில் வெற்றிப் பெற பிரபாகரனுக்கு பணப் பொதிகளை கொடுக்கவில்லை
உலகத்திடம் கடன் பெற்று நாடு அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்ட பின்னர், தொடர்ந்தும் கொண்டு நடத்த முடியாத காரணத்தினால், அரசாங்கத்தை தன்னிடம் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்டதுடன் நாடு தற்போது படிப்படியாக முன்னேறி வருவதாகவும், அரசாங்கம் முதலாவது ஆண்டை கொண்டாடுகின்றது, இரண்டாம் ஆண்டை கொண்டாடும் போது நாடு தற்போதுள்ளதை விட பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இன்று நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்த திருடர்கள் விரட்டப்பட்ட பின்னர் கிரிக்கெட் அணி தற்போது வெற்றிகளை உறுதிப்படுத்தி வருகிறது. நாட்டில் திருடர்கள் விரட்டப்பட்டதால், நாடும் அபிவிருத்தியடைந்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது என்னை தேசத்துரோகி என்கின்றனர். நான் பிரபாகரனுக்கு பணப் பொதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றிப் பெற நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒன்றாக இணைந்து கிராமத்தை முன்னேற்றுவோம், ஒன்றாக இணைந்து நாட்டை முன்னேற்றுவோம், ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
No comments