சாலையை கடக்க முயன்ற சிறுமியை தூக்கிவீசிய கார்!... பின்பு சிறுமி கொடுத்த அதிர்ச்சி...
சீனாவில் சாலையை கடக்கும்போது எதிர்பாராதவகையில் வாகனம் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுமி காயமின்றி தப்பியது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.
சீனாவின் ஆன்ஹுவி மாகாணத்தில் உள்ள Chuzhou என்ற நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது சிறுமி ஒருவர் பரபரப்பான அந்த சாலையில் வாகனம் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவகையில் வந்த கார் ஒன்று சிறுமி மீது மோதியுள்ளது. இதில் சிறுமி சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
தூக்கி வீசப்பட்ட சிறுமி சுதாரித்துக்கொண்டு உடனடியாக எழுந்து அங்கிருந்து சென்றுள்ளார். சிறுமி தூக்கி வீசப்பட்டபோது சாலையில் புரண்டு எழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
No comments