இது பாகிஸ்தான் உலகக்கிண்ணம் வென்றதற்கு சமமானது
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியது என்பது நாங்கள் உலகக்கிண்ணம் வென்றதை போல் மகிழ்ச்சியானது என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியா இலங்கை அணியிடம் படுதோல்வி அடைந்ததன் மூலம் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டது.
இதனால், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணி முதலிடத்தை தக்கவைக்க மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், 4 நாட்களாக தொடர் மழை பெய்ததால் அப்போட்டி டிராவில் முடிந்தது. எனினும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இதனால், டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை பின்னுக்குத் தள்ளி முதன் முறையாக முதலிடத்தை பிடித்தது.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறுகையில், பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்திற்கு முன்னேறியது என்பது மிகப் பெரிய சாதனை.
தற்போது உலகக்கிண்ணத்தை வென்றது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது சவாலான விடயம் என்று தெரிவித்துள்ளார்.
No comments