Header Ads

அரசியலை விட்டு நிரந்தரமாக செல்கிறேன்: முன்னாள் பிரதமர்

கனடா நாட்டு முன்னாள் பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதுடன் அரசியலை விட்டு நிரந்தரமாக செல்வதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் முன்னாள் பிரதமரும் கன்செர்வேட்டிவ் கட்சி தலைவருமான ஸ்டீபன் ஹார்பர் படுதோல்வியை சந்தித்தார்.

லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஆட்சியை இழந்த போதிலும் கல்கேரி நகர நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 10 மாதங்களாக தனது மக்கள் பணியை ஹார்பர் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலை விட்டு நிரந்தரமாக செல்வதாக நேற்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘கனடா நாட்டு முன்னாள் பிரதமராகவும், கல்கேரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் எனக்கு வாய்ப்பு அளித்த பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது வாழ்வின் மற்றொரு அங்கத்தில் நுழைவதால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு செல்வதாக’ ஹார்பர் தெரிவித்துள்ளார்.

ஹார்பர் முதன் முதலாக கடந்த 1993ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், மூன்று முறை கன்செர்வேட்டிவ் கட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்காலத்தில் கல்கேரி நகரில் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.