Header Ads

புதிய கட்சி ஆரம்பிப்பவர்களுக்கும்! பொன்சேகாவின் நிலையே


புதிய கட்சி ஆரம்பித்தால் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்

நேற்று கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சரத் பொன்சேகா புதிய கட்சியை ஆரம்பித்து போட்டியிட்டார் கடைசியில் அவருக்கு நிகழ்ந்தது என்ன, கட்சியை விட்டு விட்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதே.

இவ்வாறான நிலைதான் நாட்டில் புதிய கட்சியை அமைப்பவர்களுக்கு ஏற்படும், அதற்கு காரணம் நாட்டில் இருப்பது பிரதான இரண்டு கட்சிகளே. இதனால் சுதந்திர கட்சி பிளவு படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நான் மஹிந்தவிற்கு ஆதரவு அளிப்பேன் அவருக்கு மரியாதை செலுத்துவேன், அவராலேயே நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று நாம் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது.

அவர் சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது அவர் செய்தது முற்றிலும் சரியானதே கட்சிக்காகவே அவர் இதனை செய்கின்றார்.

அதே போல் மைத்திரிக்கும் நாம் கடமை பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.