Header Ads

நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவை


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர், தீர்த்தோற்சவங்களை முன்னிட்டு முன்னிட்டு விஷேட போக்கு வரத்து சேவை வழங்கப்படவுள்ளது.

ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் முதலாம் திகதி ஆகிய இரு தினங்களிலும் 60 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதிகாலை 4 மணி முதல் யாழ். குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளன.


அத்துடன் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் பக்தர்கள் தத்தமது இடங்களுக்கு மீளவும் செல்வதற்கு வசதியாகவும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தேர், தீர்த்த உற்சவங்களின் போது அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பதால் வழமைக்கு மாறாக அதிகமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கடந்த வருடம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு கொழும்பிலிருந்து ஐந்து பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

இந்த வருடம் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாகவும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் கொழும்பிலிருந்து நல்லூரை நோக்கி விஷேட சேவைகள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

ஏற்கனவே, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு இரவு 07 மணிக்கு கொழும்பிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் வரையான புதிய பேரூந்து சேவைஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.