Header Ads

விபத்தில் இறந்தவரின் உடலின் மேல் அவரின் ஆத்மா..?

ஒருவர் மரணம் அடைந்ததும் அவரின் உடலில் இருக்கும் 'ஆத்மா' அந்த உடலை விட்டு வெளியேறும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால், நேரில் பார்த்திருப்போமா.?? பார்க்க வேண்டுமென்றால் சமீபத்தில் அமெரிக்காவின் கென்டக்கியில் நிகழ்ந்த சாலை விபத்தில் எடுக்கப்பட்ட ஒரு 'திகில் கிளப்பும்' புகைப்படத்தை தான் நாம் பார்க்க வேண்டும்.

அந்த புகைப்படத்தில் அசாத்தியமான பதிவொன்று நிகழ்ந்துள்ளதாக கருதப்பட்டு இண்டெர்நெட் வைரலாக உலகம் முழுக்க பரவி வருகிறது, முக்கியமாக ஆத்மா ஆவிகள் பேய்கள் என்பவர்கள் மத்தியில்..!

கென்டகியின் பவுல் கவுன்டியில் ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் (மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்).

கென்டக்கியின் மவுண்ட் ஸ்டெர்லிங்கை சேர்ந்த சவுல் வாஸ்க்வெஸ் என்பவர் விபத்துக்குள்ளான பகுதியை புகைப்படம் எடுத்துள்ளார், அதை உற்று நோக்கிய பின்பு அதிர்ச்சி அடைந்துள்ளார்..!

அந்த புகைப்படத்தில் விபத்துக்கு உள்ளான பகுதியில் ஆம்புலன்ஸ்கள் சூழ நிற்பது பதிவாகியுள்ளது உடன் ஆம்புலன்ஸ்களுக்கு மேலே வெள்ளையாக ஒரு உருவம் மிதப்பது போன்றும் பதிவாகியுள்ளது.

அதை கண்டு அதிர்ந்து போன சவுல் வாஸ்க்வெஸ் அந்த புகைப்படத்தை "ஸூம் செய்து காவல் துறை அதிகாரியின் தொப்பிக்கு மேல் கவனிக்கவும்" என்ற தலைப்பெழுதி முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இண்டர்நெட் வைரலாகிப் போன அந்த புகைப்படத்தில் தோன்றும் வெள்ளை உருவமானது இறந்து போனவரின் ஆத்மா என்று முகநூலில் கருத்துக்களுடன் சேர்த்து பகிர்வும் நடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தில் எந்தவிதமான போலி வேலையும் செய்யவில்லை என்று சவுல் வாஸ்க்வெஸ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.